இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தை சார்ந்தவர் மருத்துவர் பிரியங்கா ரெட்டி (வயது 26). இவர் அங்குள்ள கொல்லாபுரில் இருக்கும் அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில்., நேற்று முன்தினதன்று வழக்கம் போல பணியை முடித்துவிட்டு மருத்துவரை சந்திப்பதற்கு அங்குள்ள கச்சிபவுலிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
பின்னர் இவரது அங்குள்ள சுங்கச்சாவடிக்கு அருகே இரு சக்கர வாகனமானது எதிர்பாராத விதமாக பஞ்சராகவே., அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர் பஞ்சர் ஒட்டி தருவதாக கூறியுள்ளனர். மேலும்., இதனை கேட்ட மருத்துவர் வேண்டாம் என்று கூறவே., வலுக்கட்டாயமாக முன்வந்து பஞ்சரை சரி செய்வதாக கூறியுள்ளனர். இதனையடுத்து பயந்து போன மருத்துவர் தனது சகோதரிக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
சகோதரிக்கு தொடர்பு கொண்ட மருத்துவர் விஷயத்தை தெரிவித்து., செய்வதறியாது திகைப்பதாகவும்., தன்னை காப்பாற்றுமாறும்., தனக்கு பயமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் சகோதரி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் உறவினர்கள் அனைவரும் சம்பவ இடமான சுங்க சாவடி பகுதிக்கு சென்றுள்ளனர்.
பிரியங்கா ரெட்டி பேசிக்கொண்டு இருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில்., சம்பவ இடத்திற்கு உறவினர்கள் விரைந்த நேரத்தில் பிரியங்கா மயங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக சாம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., ஐதராபாத் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஷாத்நகர் பாலத்திற்கு கீழே அடையாளம் தெரியாத பெண்ணின் பிணம் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றினர். விசாரணையில் இது பிரியங்காவின் உடல் என்று தெரியவரவே பெரும் அதிர்ச்சி அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்டது. மேலும்., சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஜோடி காலனி., உள்ளாடை மற்றும் பர்ஸ்., காலி மது பாட்டில் இருப்பதை கைப்பற்றினர்.
பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்., அங்குள்ள கண்காணிப்பு காமிராக்கள் அடிப்படையிலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியின் ஓட்டுநர் மற்றும் க்ளீனர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் மூவர் சிறுவர் என்றும் கூறப்படுகிறது. மேலும்., பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது உறுதியாகியுள்ளது. காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.