நடிகர் ரஜினி நடித்து வரும் பொங்களுக்கு வெளியாகவுள்ள படம் தான் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. ரஜினி டப்பிங் பணியை சமீபத்தில் முடித்ததாகவும், தற்போது படத்தில் நடித்த மற்ற நடிகர்களின் டப்பிங் பணிகள் செய்து வருகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது.
மேலும் அனிருத்தின் பின்னணி இசை பணிகள் நடந்து வருகிறதாம். பாடல்கள் அனைத்தும் முடிந்த நிலையில் 27 நவம்பர் 5 மணிக்கு தர்பார் படத்தின் சிங்கிள் “சும்மா கிழி” பாடலை வெளிட்டனர் படக்குழு.
சும்மா கிழி பாடல் 24 மணி நேரத்தில் 8 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள். இதற்கு முன் விஜய் நடித்த “பிகில்” படத்தில் வெளியான “வெறித்தனம்” சிங்கிளின் சாதனையாக 24 மணி நேரத்தில் 6மில்லியன் பார்வையாளர்கள் சாதனைதான் இருந்துள்ளது. தற்போது “சும்மா கிழி” பாடல் அந்த சாதனையை முறியத்துள்ளது.
இதனை அனிருத் “இது தலைவரின் அன்பு சாம்ராஜ்யம்” என்றும் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட தமிழ் பாடல் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்..
Idhu Thalaivarin Anbu saamraajyam?????? #ChummaKizhi hits 8 million and is the highest viewed Tamil song in 24 hours ?????? #DarbarPongal #DarbarThiruvizha
Thank you and love you all 🙂 @ARMurugadoss sir #SPB sir @Lyricist_Vivek ??? pic.twitter.com/5KQQzhoxdD— Anirudh Ravichander (@anirudhofficial) November 28, 2019