பிரபல தனியார் தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. அறிமுகமாகியதுடன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.
தற்போது நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும், தொகுப்பாளர் மாகாபா ஆனந்துடன் தனியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர் பூவையாரிடம் வாய் கொடுத்து மாட்டிக்கொள்வார். சூப்பர் நிகழ்ச்சி மூலம் விஜய்யின் பிகில் படத்தில் பாடல் பாடியுள்ளான் சிறுவன் பூவையார்.
சமீபத்தல் தனியார் இணையதளம் விருது விழா ஒன்றை நடத்தியது. இதில் பூவையார் பாப்புலர் ரியாலிட்டி ஷோ கண்டஸ்டண்ட் என்ற விருதினை பெற்றுள்ளான். அங்கு பேசிய பூவையார் பிரியங்கா அக்கா இல்லாமல் இந்த அவார்ட் இல்லை. அக்காவை கலாய்த்து தான் நான் இந்த இடத்திற்கு வந்தேன் என்று கூறி கலாய்த்துள்ளார்.
இதை கேட்ட தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் அதிர்ச்சியாகி சிரித்தார். பூவையார் மேடையில் இருக்கும் போது மாகாபாவையும் கூறியுள்ளார்.