சின்னத்திரையில் பிரபலமானவர் விஜய் டிவி மைனா நந்தினி. இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த மைனா கதாபாத்திரம் மூலம் பிரபலமானார். அந்த சீரியலில் நடித்ததன் மூலம் விஜய் டிவி மைனா நந்தினி என்று அழைக்கப்பட்டார்..
இவர் திரைப்படங்களில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பின் சீரியல்களில் அதிக கவனம் செலுத்தினார். சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, சின்னத் தம்பி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். ரோமியோ ஜூலியட், வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களிலும் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் சின்னத்திரை நடிகரான யோகேஸ்வரனுடன் திருமணம் செய்து கொண்டார். அவர் திருமண நிகழ்ச்சியில் உடன் பிறந்த தம்பியுடன் நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது தன் தம்பியுடனான மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்வு, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்கூடவே பொறக்கணும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளார்.