தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பலரையும் தன நடிப்பால் கவர்ந்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நசீம்.
திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போதே சில ஆண்டு பின்பு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு திரைத்துறையிலிருந்து விலகினார். தற்போது ஒரு சில மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் “TRANCE” என்ற திரைப்படத்தில் நஸ்ரியா நடித்து வருகிறார். இந்த படத்தில் நஸ்ரியாவிற்கு ஜோடியாக அவரது கணவர் பஹத் பாசில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.
அந்த போஸ்டரில் நடிகை நஸ்ரியா குட்டையான பாவாடை அணிந்து வாயில் தம்முடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் இது நஸ்ரியாவை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.