விசுவாசம் படத்தை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் சிறுத்தை சிவா. இந்த படத்திற்கு தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கான ஷூட்டிங் அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்க இருக்கிறது.
இந்த படத்தில், காமெடியன் சூரி இணைந்திருப்பதாக நேற்று அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இதை தொடர்ந்து இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது தற்போது வரை அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம். மேலும் இதில் ரஜினியின் மகளாக அதிகம் முக்கியத்துவம் உள்ள ரோலில் நடிக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது.