பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெற்றி நாயகனாக ஜொலித்தவர் தான் தர்ஷன். என்னதான் இவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும் எல்லா ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளார்.
சமீபத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர். சமூக வலைத்தளங்களில் நிறைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக்கி விடுகின்றனர் ரசிகர்கள்.. இந்நிலையில் தற்போது கோட் சூட்டில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் தர்ஷன். இந்த புகைப்படத்தையும் ரசிகர்கள் பகிர்ந்தும் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.