பிரபலத்துடன் குத்தாட்டம் போட்ட குஷ்பூ…வெளியான வீடியோ !!

80கால கட்டங்களில் மக்கள் மனதை கவர்ந்த நடிகர் நடிகைகள் ஒன்று கூடி 80ஸ் ரீயூனியன் என்னும் பெயரில் இந்த கொண்டாட்டத்தை ஆடலும் பாடலுமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஐதராபாத்தில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன் லால், நாகர்ஜுனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

அதில் சிரஞ்சீவியின் மெகா ஹிட் பாடலான ஹோ பாப்பா பாடலுக்கு குஷ்பூவுடன் சேர்ந்து பயங்கர அட்டகாசமாக நடனம் ஆடினார்கள். இந்த காட்சியை ராதிகா, நாகர்ஜுனா உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் குடியும் கூத்துமாக வேடிக்கை பார்த்ததோடு, கைத்தட்டி ரசித்து கொண்டிருந்தார்கள்.

இந்த வீடியோவை ரீடிவிட் செய்த தயாரிப்பாளர் தனஞ்செயன், அற்புதமான நடனம். இந்த வயதில் என்ன ஒரு எனர்ஜி. வெரி இன்ஸ்பயரிங் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆதரவாக கமெண்ட்ஸ் செய்துள்ள நெட்டிசன்கள் மத்தியில், இந்த வயசுல குடிச்சிட்டு கூத்தடிக்குறாங்க இதெல்லாம் இன்ஸ்பயரிங்கா என்று சிலரும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.