ஹரியானா மாநிலத்தில் இருக்கும் குறுகிராம் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்குகின்றது. இங்கே சிகிச்சைக்காக 40 வயது பெண்மணி ஒருவர் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு வருடமாக இந்த மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் பணிபுரிந்து வருகின்றார்.
அந்த பெண்ணின் அறைக்கு அவர், அதிகாலையில் சென்று நோயாளி மயக்கத்தில் இருப்பதை பார்த்துள்ளார். அதன் பின்னர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கின்றார். மயக்க நிலையில் இருந்ததால் அந்தப் பெண்மணி அதனை தடுக்க முடியாமல் இருந்துள்ளார்.
அதன் பின்னர் மயக்கம் தெளிந்த நிலையில், தன்னுடைய கணவர் வந்ததும் அவரிடம் தெரிவித்துள்ளார். வேதனை அடைந்த அவருடைய கணவர் மருத்துவமனையை நிர்வாகிகளிடம் புகார் அளித்தார். பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அவர்கள் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருக்கின்றார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றது.