கடைசி நேரத்தில் கதையை மாற்றிய அட்லீ..!

இயக்குனர் அட்லி பிகில் படத்தை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து “சங்கி” என்னும் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிது. ஆனால், இது உண்மையில்லை என்று கூறுகிறார்கள்.

இதை தொடர்ந்து, அவர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தையும், நடிகர் விஜய் வைத்து தான் எடுக்கப்போகிறார் என்ற தகவலும் வந்துள்ளது. மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் நம்பத்தகுந்த வகையிலான தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த கூட்டணி இன்னும் உறுதியாக முடிவாகவில்லை என்றும், பேச்சுவார்த்தை தான் நடந்துகொண்டிருகின்றதாம். நடிகர் விஜய் ஓகே சொன்னால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். ஆனால், தற்போது தன்னுடைய கவனம் முழுதையும் தளபதி64 படத்தில் தான் வைத்துள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.