மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலி..!!

கிளிநொச்சி சிவநகர் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.

22 வயதான அதே பகுதியை சேர்ந்த இளைஞன் இன்று (30) காலை மின்சாம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவநகர் பகுதியில் அமைந்துள்ள தந்தைக்கு சொந்தமான அரிசி ஆலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரசி ஆலையில் உள்ள பகுதி ஒன்றில் வெள்ள நீர் காணப்பட்டுள்ளது. வெள்ள நீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.