கோவை மாவட்டத்தில் கீரநாயக்கன் பாளையம் என்ற பகுதியில் ஐஸ்வர்யா நகரில் பூங்கா ஒன்று இருக்கின்றது. அதில் சமீபத்தில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் விழா கொண்டாட சென்றுள்ளார்.
பிறந்தநாள் விழா முடிய இரவு வெகு நேரம் ஆகி இருக்கின்றது. எனவே ,அந்தப் பெண்ணிடம் மணிகண்டன் என்பவர் அத்துமீற முயற்சித்து இருக்கின்றார். இதன் காரணமாக மாணவி கூச்சலிட்டும் அவருடைய நண்பர்கள் யாரும் கண்டு கொள்ளாமல் அவரை கற்பழிக்க உடந்தையாக இருந்துள்ளனர்.
மணிகண்டன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றார். மேலும், வேறு ஒருவர் இதனை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அந்த மாணவியின் நண்பர்களான பிரகாஷ், ராகுல், கார்த்திகேயன் மற்றும் நாராயண மூர்த்தி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர்.
இதில் குற்றவாளியான மணிகண்டன் மற்றும் வீடியோ எடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.