தனுஷ் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸானது. இப்படம் சுமார் மூன்று வருடங்களாக ரிலிஸாகாமல் கிடப்பில் இருந்தது.
இந்நிலையில் ஒரு வழியாக பிரச்சனைகள் முடிந்து நேற்று ரிலிஸாகிவிட்டது, இப்படம் உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பை தான் பெற்றுள்ளது.
சுமார் ரூ 8 கோடிகளுக்கு மேல் இப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
எப்படியும் இந்த வார இறுதியில் இப்படம் ரூ 30 கோடிகள் வரை உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.