கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களின் பல ரகசியங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சிக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அலரி மாளிகையில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தொடர்பான முக்கிய ஆவணங்களே கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
அதற்கமைய அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழியர்களிடம் இந்த கடிதங்கள் கிடைத்துள்ளன.
பிரதமராக ரணில் விக்ரமசிங்க செயற்பட்ட காலப்பகுதியில் அவரது அமைச்சரவை அமைச்சர்களின் மோசடி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான தகவல்கள் இந்த கடிதத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
மீட்கப்பட்ட கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பொறுப்பில் எடுத்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.