சென்னை அடையாறில் அஸ்வினி பிஷரிஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு ஹார்ட் டிஸ்க்கை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து, அந்த ஹார்ட் டிஸ்க்கை ஆராய்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அப்போது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த செந்தில்குமார் என்ற ஊழியர் பெண்கள் கழிவறையில் ஸ்பை கேமரா வைத்திருப்பதை கண்டறிந்தனர். இந்நிலையில் கழிவறையில் கேமரா வைத்தது அனைவருக்கும் தெரிய வந்ததால் ஊழியர் செந்தில்குமார் நிறுவன வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிவறையில் கேமரா வைத்த இந்த சம்பவம் பெண்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.