உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய் எச்.ஐ.வி. (ர்ஐஏ) என்னும் வைரஸ் மூலம் பரவுகிறது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை தாக்கி அழிப்பதால்இ உடலில் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடுகிறது. இதனால் பல நோய்கள் தொற்றிஇ இறப்பு ஏற்படுகிறது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1987ஆம் ஆண்டு இத்தினம் அறிவிக்கப்பட்டது.
2018-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களின் 72 % சதவிகிதம் பேர் தங்களது நிலையை அறிந்து கொண்டு இருக்கின்றனர். 62 சதவீதம் பேர் ஏ.ஆர்.டி., சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் 2017 கணக்கின் படி, இந்தியாவில் 21 லட்சம் பேர் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்.