அல்பேனியாவில் நிலநடுக்கத்தில் 49 பேர் உயிரிழப்பு.!

அல்பேனியா நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரையில் சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளனர்

கடந்த செவ்வாய்க்கிழமை ஷிஜாக் என்ற நகரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது. ரிக்டர் அளவில் 6.4 புள்ளியாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் காயமடைந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வீடுகளை இழந்தவர்களுக்கு அந்த நாட்டின் அரசு சார்பில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

அந்த நாட்டில் உள்ள Tirana என்ற பல்கலைகழகம் மூடப்பட்டுள்ளதால், அதில் படிக்கும் சீனாவை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், வீடுகளை இழந்து தவித்து வரும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மாணவர்கள் செய்து வருகின்றனர்.