ஆற்றுப்பாலத்தில் சென்ற பேருந்து விபத்திற்குள்ளான சோகம்.!

இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் அரங்கேறும் பல்வேறு விபத்துகளின் காரணமாக மக்கள் பரிதாபமாக பலியாகி வருகின்றனர். மேலும்., இவ்வாறான உயிரிழப்புகளால் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு பெரும் சோகம் ஏற்படுகிறது.

ரஷியா நாட்டில் உள்ள சபாகல்ஸ்க்கி மாகாணத்தில் உள்ள கிழக்கு பகுதியில் பேருந்து சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த பேருந்து சுமார் 40 க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.

இந்த பேருந்தானது அங்குள்ள மகிடூய் – ஓலோச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தின் மீது பேருந்து சென்று கொண்டு இருந்த போது., பேருந்தின் முன்பக்க டயரானது எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது.

இதனால் நிலைதடுமாறிய பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த பேருந்து விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

மேலும்., பேருந்தில் இருந்த மீதமுள்ள மக்கள் உயிருக்காக அலறித்துடித்த நிலையில்., இது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.