தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றது அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி துறைக்கான பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016 அக்டோபர் 24ஆம் தேதி முடிவடைந்தது.
இதையடுத்து, இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடைபெற வில்லை இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதையயடுத்து, தமிழகத்தில் விரைவாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இன்று தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேதியை அறிவித்தது. அதன் படி,
1ம் கட்ட தேர்தல்: டிசம்பர் 27
2ம் கட்ட தேர்தல்: டிசம்பர் 30
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள்: டிசம்பர் 6
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: டிசம்பர் 13
திரும்ப பெற கடைசி நாள்: டிசம்பர் 18
தேர்தல் முடிவு: ஜனவரி 2, 2020
உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டு, அன்றே உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை அறிவிப்பு குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, நகர்ப்புற பகுதிகளுக்கும் தேர்தலை அறிவித்திருக்க வேண்டும், ஊரக பகுதிக்கு மட்டும் தனியே தேர்தல் என்பது முறைகேடு நடக்க வழிவகுக்கும்.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காது. அதிகாரிகளை வைத்து ஆட்சி செய்து, கொள்ளையடிக்க பார்க்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.