நடிகர் அஜித் மகன் ஆத்விக்கா இது.?

நடிகர் ரஜினி கூறியது போல என் வழி தனி வழி என சினிமாவில் தனக்கென தனி பாதை வகுத்து பயணிப்பவர் நடிகர் அஜித். எந்த ஒரு பட நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்வதுதில்லை.

மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட கூடாது, என்பதற்காக அவ்வளவாக வெளியே கூட செல்லமாட்டார் படம் நடிப்பது எனது வேலை பிடித்தால் பாருங்க இல்லையெனில் விடுங்கள் என்று தான் தனது ரசிகர்களிடம் சொல்வார்.

மேலும் எனது ரசிகராக இருந்தால் உங்களது குடும்பத்தை முதலில் கவனியுங்கள் என பல முறை கூறியிருப்பர். பயணத்தின் போது அவரை அடிக்கடி விமான நிலையத்தில் பார்க்கலாம், ஆனால் இப்போது அது கூட சமீப காலமாக இல்லை.


மேலும், அஜித் அவர்கள் டப்பிங் வேலைக்காக மட்டும் வெளியே வருவார், ஆனால் தற்போது அதற்கும் இனி வழி இல்லை. அவர் வீட்டிலேயே டப்பிங் ஸ்டூடியோ கட்டிவிட்டதாக தகவல் வெளிவந்தது.

அஜித்தின் மகளை அனைவரும் பார்த்திருப்போம், ஆனால் அவரது மகனை யாரும் பெருமளவு பார்த்திருக்க மாட்டார்கள். தற்போது சமூக வலைதளங்களில் என்ன வைரல் என்றால் அஜித்தின் மகன் ஆத்விக்கின் கியூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுதான் இப்போது மிகவும் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த அஜித்தின் ரசிகர்கள், அப்பாவையே மிஞ்சும் அளவில் அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் செய்துவருகிறார்கள்.