விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் இயக்குநர் சேரன்.
இந்நிலையில், இயக்குநர் சேரன் இந்த பிக்பாஸில் சேரன் கலந்து கொண்டது பல விமர்சனங்களை எழுப்பியது, தமிழக விருது, தேசிய விருது என மக்களுக்கு பல தரமான திரைப்படங்களை கொடுத்த சேரன் இந்த நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என பலரின் கேள்வியாக இருந்தது.
இது ஒருபுறமிருக்க, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனிடம், மீராமிதுன் நடந்துகொண்ட விதம், அனைவரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவமரியாதையாகவும், அவர் மீது மீராமிதுன் பொய் புகார் கூறியதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுமட்டுமல்லாது, லொஸ்லியா, கவின் காதல் விடயங்களும் சேரனுக்கு பல விதங்களில் பிரச்சனையை ஏற்படுத்தியது.
இதனால், பலரும் சேரனிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் போனீர்கள் என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.
இந்நிலையில், சேரன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான காரணத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறியுள்ளார்.