ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கக்கோரி நாடு முழுவதுமே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்தக் குற்றத்தைச் செய்த முகமது பாஷா என்ற ஆரீஃப், கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேரும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், முக்கிய குற்றவாளியான ஆரீஃப் இரண்டு வருடங்கள் லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்கி வந்துள்ளார்.
பிரியங்கா கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அதாவது 24ம் திகதி ஆரீஃப், சிவா இருவரும் செங்கல் லோடை ஏற்றிக்கொண்டு ஹைதராபாத் நோக்கி பயணித்துள்ளனர்.
அப்போது தான் மற்ற இருவருக்கும் போன் செய்து தெலுங்கானாவின் குடிகண்ட்லா கிராமத்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த இரும்பு லோடை ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில், 25ம் திகதி அதிகாலை மஹ்புப் நகரில் பொலிசாரிடம் மாட்டியுள்ளனர்.
லைசென்ஸ் இல்லாதது தெரியவந்ததும் லொறியை கைப்பற்ற பொலிசார் முடிவெடுத்தனர், அப்போது ஆரீஃப் வண்டியில் செல்ப் ஸ்டார்ட் கிடையாது என கூறி அந்த கேபிளை பிடுங்கி விட்டுள்ளார்.
இதனால் லொறியை நகர்த்த முடியாத சூழல் இருந்த நிலையில், பொலிசார் வேறொரு நபரை விசாரித்துக் கொண்டிருக்கும் போது ஆரீஃப் தப்பி ஓடிவிட்டார்.
இரும்பு பொருட்களை விற்றுவிட்டு அங்கிருந்து 26ம் திகதி இரவு 9 மணியளவில் ஷம்ஷாபாத்தின் சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு படுத்து தூங்கியுள்ளனர்.
மறுநாள் காலை பொலிஸ் வந்து வண்டியை நகர்த்த சொன்னதும், அங்கிருந்து தொண்டுபள்ளி டோல்கேட்டுக்கு சென்றுள்ளனர், அங்கு தான் பிரியங்காவை கொடூரமாக சீரழித்ததாக தெரிவித்துள்ளனர்.