3 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதி…!!

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவருக்கு வந்திருக்கும் நோய் அரிய வகை நோயான க்ரோன் நோயா என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

பிரித்தானியாவின் Lancaster பகுதியை சேர்ந்தவர் Vicky Winstanley. 38 வயதான இவர் தன்னுடைய இளம் வயதில் இருந்தே கடுமையான வயிற்று வலி பிரச்சனையை சந்தித்து வந்துள்ளார்.

ஆரம்பத்தில் அதை பெரிதாக எடுத்து கொள்ளாத அவர், அதன் பின் 2017-ஆம் ஆண்டு மருத்துவமனைக்கு இதற்கான காரணத்தை அறிய சென்றுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து அதே பகுதியில் வலி ஏற்பட்டதால், மீண்டும் மருத்துவமனைக்கு சில மாதங்கள் கழித்து சென்றுள்ளார்.

அப்போது இரத்தப்போக்கு போன்ற காரணங்களால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின் மீண்டும், மீண்டும் பிரச்சனை வர ஸ்கேன் மற்றும் அதற்கான அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் 150 நாட்கள் மருத்துவமனையிலே தன் வாழ்க்கையை கழித்துள்ளார்.

இவருக்கு Nathan என்ற 13 வயது மகன் உள்ளான். இதனால் மகனை பார்த்து கொள்ள வேண்டும், குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும் போன்ற கட்டத்திற்குள் வாழும் Vicky Winstanley என்ன தான் பிரச்சனை என்பது தெரியவில்லை, ஆனால் மருத்துவர்கள் இது ஒரு வேளை அரியவகை நோயான Crohn’s disease-ஆக் இருக்கலாமோ என்று மருத்துவர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

இது 200 பிரித்தானியார்களில் ஒருவரை பாதிப்பதாகவும், அதை கண்டறிவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.

ஆனால் Vicky Winstanley இதை பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை, எனக்கு நம்பிக்கையிருக்கிறது. எனக்கு ஆதரவாக என்னுடைய மகன், கணவன் மற்றும் உறவினர்கள் இருப்பது அதிர்ஷ்டன், கூடிய விரைவில் இதற்கான தீர்வை காண்பேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.