இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக பெயர் சூட்டப்பெறாத படம் ஒன்றில் நடித்து வந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தற்பொழுது டீசர் வெளியானது. இந்த படத்திற்கு ‘டகால்டி’ என தலைப்பு வைக்கப்பட்டதை அடுத்து., இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை ரித்திகா சென் என்பவர் நடித்து வருகிறார். மேலும் சந்தானத்தின் நண்பராக யோகி பாபு நடித்து வருகிறார்.
பொதுவாகவே, நடிகர் சந்தானத்தின் நகைச்சுவை கவுண்ட்டர்களுக்காக அவரது படங்களை வெகுவாக ரசிப்பார்கள். யோகிபாபுவும் அப்படிதான் அவரது கேசுவலான காமெடிகளை மிகவும் ரசிப்பார்கள்.
இந்த இருவரும் இணைந்து நடிக்கும் பட்சத்தில் படத்தில் நிச்சயம் சிரிப்பிற்கு பஞ்சமிருக்காது. படம் முழுக்க எண்டர்டெயின்மெண்ட்டுக்கு பஞ்சமிருக்காது என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது “டகால்டி”..!
இந்த நிலையில்., நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் நடைபெற்று வந்த நிலையில்., இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.
இதனைப்போன்று நடிகர் சந்தானத்தின் டகால்டி திரைப்படத்தின் படப்பிடிப்பானது நடைபெற்றது. இந்த விஷயம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.