சீரற்ற காலநிலையின் காரணாக 14,164 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையின் காரணாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

34 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 4,153 குடும்பங்களைச் சேர்ந்த 14,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 946 குடும்பங்களை சேர்ந்த 3,149 பேர் 29 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ் அனர்த்தத்தில் 5 பேர் பலியானதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.