அடுத்த 2 நாட்களிற்குள் முடிவில்லா விட்டால் மாற்று நடவடிக்கை!

எதிர்க்கட்சி தலைவர், கட்சி தலைவர் பதவி குறித்து அடுத்த இரண்டு நாட்களிற்குள் முடிவு எட்டப்படாவிட்டால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நளின் பண்டார இதனை தெரிவித்தார்.

எனினும், சஜித் பிரேமதாசா பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார் என்று துஷாரா இந்தூனில் எம்.பி குறிப்பிட்டுள்ளார். சுஜீவ சேனசிங்கவும், சர்ச்சை தீர்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐ.தே.கவின் செயலாளர் அகிலவிராஜ் கரியவாசம், கட்சித் தலைமை மற்றும் எதிர்க்கட்சி தலைமை குறித்து முடிவு செய்ய அடுத்த வியாழக்கிழமை சிறப்பு கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பௌத்த அடித்தளத்தை வெல்லும் முயற்சியாக கட்சியின் பொறிமுறையை மறுசீரமைக்க மற்றும் மகா சங்கத்தின் ஆதரவைப் பெற ஒரு சிறப்பு வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்ய ஐ.தே.க திட்டமிட்டுள்ளது.