காதலை முறித்துகொண்டால் ஆசீட் வீசிவிடுவேன்.. நடிகை வெளியிட்ட வீடியோ!!!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் “பேரன்பு”. இத்திரைப்படத்தில் திருநங்கை நடிகை அஞ்சலி அமீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் மற்றும் மாடலாகவும் பணியாற்றி வருகிறார் அஞ்சலி அமீர்.

கோழிக்கூடை சேர்ந்த ஆனஸ் வி.சி என்பவருடன் லிவிங் ரிலேஷனில் இருந்து வருகிறார், இந்நிலையில் ஆனஸ் விசி தன்னிடம் பல மோசடிகள் செய்ததால் அவருடன் வாழ விருப்பம் இல்லாமல் அவரை பிரிய முடிவு செய்துள்ளார், தன்னை விட்டு பிரிந்தால் ஆசிட் விசுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ஆனஸ் வி.சி.

இதையடுத்து நடிகை அஞ்சலி அமீர் பேஸ்புக் லைவ்வில் ஆனஸ் விசி தன்னிடம் பண மோசடிகள் செய்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தொடர் தொல்லையால் தற்கொலை எண்ணத்திற்கு வந்ததாகவும், தனக்கு ஏதேனும் மோசமான சம்பவம் நேருமானால் , அதற்கு கரணம் அவர் தான் என்று அஞ்சலி அமீர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்றி போலிசிலும் புகாரளித்திருப்பதாக கூறி இருந்தார். நடிகை அஞ்சலியின் இந்த பேஸ்புக் லைவ் சமூக வலைத்தளங்களில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.facebook.com/anas.vc.koduvally he is that man

Publiée par Anjali Ameer sur Mardi 3 décembre 2019