பொதுஇடத்தில் நடிகையிடம் சில்மிஷம் செய்த இளைஞர்..

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சயீப் அலிகான். இவருடைய மகளான சாரா அலிகான் தற்போது இளம்நடிகையாக வளர்ந்து வருகிறார். பெரிய அளவில் பிரபலமாகாவிட்டாலும் ரசிகர்கள் ஓரளவிற்கு இருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர் எங்கு சென்றாலும் அவரிடம் ரசிகர்கள் செல்பி எடுப்பது வழக்கம். சமீபத்தில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சாரா அலிகானிடன் சில இளைஞர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

அப்போது திடீரென ஒரு இளைஞர் அவர் புகைப்படம் எடுக்கும் போது நெருங்கு அணைத்தவாறு நின்று அவர் மேல் கை போட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாரா அலிகான் விலகிவிட்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

இளைஞர் செய்த செயலை பார்த்த அவரது மேனேஜர் வேகமாக கூட்டிச்சென்றுள்ளார்.