ரஜினிகாந்த அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதோடு ரஜினி பிறந்தநாள் அன்றே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் என கூறப்படுகின்றது, இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை மீனா நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஏற்கனவே இப்படத்தில் குஷ்புவும் உள்ளதாக கூறிவந்த நிலையில் இந்த செய்தி ரசிகர்களை மேலும் சந்தோஷப்படுத்தியுள்ளது.
ஏனெனில் மீனா ரஜினியுடன் நடித்த எஜமான், வீரா, முத்து ஆகிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனவை.