இங்கிலாந்தில் நடைபெறும் நேட்டோ மாநாட்டுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென ரத்து செய்தார்.
நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார். ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இத்தாலிய பிரதமர் குயிசெப்பே கான்டே உள்ளிட்டோருடன் அவர் பேச்சு நடத்தினார்.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பை ரத்து செய்து வாஷிங்டன் திரும்புவதாக டிரம்ப் அறிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக பலமுறை செய்தியாளர்களை சந்தித்துவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பு தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் டிரம்ப்பை விமர்சித்துப் பேசியது லைவ் மைக்கில் பதிவாகி இதன் காணொளி வெளியானதால் டிரம்ப் கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேட்டோ நாடுகளின் தலைவர்களின் கிண்டலும் விமர்சனமும்தான் டிரம்ப்பின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான காரணமாக கருதப்படுகிறது.