அசைவ சமையல் ஏன் அதிக ருசியாக இருக்கிறது தெரியுமா ??

பட்டாணி சிக்கன் கைமா செய்யும் போது, சிக்கனை தனியாக வேக வைத்து சேர்க்கலாம். அதனுடன் காளான், உருளைக்கிழங்கு சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

எலும்புக் குழம்பு செய்யும் போது, சாம்பார் பொடிக்கு பதிலாக மிளகாய்தூள் – இரண்டு டீஸ்பூன், மல்லிதூள் – மூன்று டீஸ்பூன் சேர்த்துக் கொண்டால் குழம்பு சுவையாக இருக்கும்.

சிக்கன் கிரேவி செய்யும் போது, கிரேவியை அடுப்பிலிருந்து எடுப்பதற்கு முன் சிறிது முந்திரியுடன் பால் சேர்த்து அரைத்து கிரேவியில் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் சிக்கன் கிரேவி ருசியாக இருக்கும்.

கறியுடன் உருளைக்கிழங்கை சேர்த்தால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

தந்தூரி சிக்கன் செய்வதற்கு சில்லி சிக்கன் பொடி சேர்ப்பதற்கு பதிலாக மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து செய்தால் தந்தூரி சிக்கன் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

சிக்கனின் தோலில் இறைச்சியைவிட மூன்று மடங்கு அதிக கொழுப்பு இருக்கும். தோல் இல்லாத சிக்கனை சமைத்தால் ருசியாக இருக்கும்.

இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

கோழி அல்லது ஆட்டு இறைச்சி வறுவல் செய்யும் போது, அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

மட்டன் சாப் துண்டுகள் மார்க்கெட்டில் தனியாக கிடைக்கும். இந்த மட்டன் துண்டுகளுடன் இஞ்சி, பூண்டு, கறிமசாலா போன்ற பொருட்களை சேர்த்து வறுவல் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். உடலுக்கு நல்லது.

மட்டன் தொக்கு செய்யும் போது காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் அல்லது மிளகாய் தூளை சேர்த்து கொள்ளலாம். அதில் சிறிது சோம்பு பொடியை சேர்த்தால் ஒரு நல்ல ருசியை மட்டனுக்கு கொடுக்கும்.

முட்டை பொடிமாஸ் செய்யும் போது மிளகாய்க்கு பதிலாக மிளகாய்பொடி சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

வேக வைத்த முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க வேண்டுமானால், வேக வைத்த முட்டையை அதன் ஓடுடன் குளிர்ந்த தண்ணீருள்ள பாத்திரத்திற்குள் வைத்து ஃப்ட்ஜில் வைக்கலாம்.

அசைவ குழம்பு வகைகளை செய்யும்போது சிறிதளவு பார்லி பவுடரை சேர்த்தால் ருசி அதிகரிக்கும்.

சிக்கன், முட்டை, இறாலில் பஜ்ஜி செய்யும் போது மைதா சேர்த்தால் நன்கு கெட்டியாக ஆகும், மைதா சேர்ப்பதால் நல்ல ஷாப்டாகவும் இருக்கும்.

கோழியின் தோல் பகுதிக்கு அடியில், அதிக கொழுப்பு படிந்துள்ளது. கோழி சமைக்கும் போது, அதிக கொழுப்புள்ள எண்ணெய், நெய் ஆகியவை சேர்த்து செய்யக் கூடாது.

கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்த்தால் சீக்கரம் சமைத்து விடலாம். ருசியாக இருக்கும்.

சிக்கன் குழம்பு செய்வதற்கு முன் சிறிதளவு உப்பை ஃப்ரை பேனில் தூவினால், சிக்கனை வளவளப்பாக கருகாமல் எளிதில் சமைத்து எடுக்கலாம். சுவையாக இருக்கும்.

மட்டன் கிரேவி செய்யும் போது வெங்காயம், தக்காளியினை பொடியாக நறுக்கி சேர்க்காமல், மிக்ஸியில் நைஸாக அரைத்து சேர்த்தால், கிரேவி கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.

சீரக சிக்கன் செய்வதற்கு மசாலா அரைக்கும் போது கசகசாவிற்கு பதிலாக நான்கு முந்திரி பருப்பினை சேர்த்து கொண்டால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

மட்டன் குழம்பு செய்ய கறிமசாலா சேர்க்கும் போது மிளகாய்த்தூளுடன், தனித்தனியாக மசாலா தூள் சேர்க்காமல் கறிமசாலா மட்டும் அதிகமாக சேர்த்து குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.