முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாளை முதல் (டிசம்பர் 6ஆம் தேதி) புதிய கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
ஜியோ இந்திய சந்தைக்குள் நுழைந்த நேரத்தில் இணைய சேவைக்கு மட்டுமே கட்டணம் வசூலித்து வந்தது. ஆனால் இந்தியாவில் இருந்த மற்ற தொலைதொடர்பு சேவைகளான வோடோஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் விலையை அதிகரித்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ‘ஆல்-இன்-ஒன்” திட்டத்தில் 40 சதவீதம் வரை கட்டண உயர்வை அதிகரித்துள்ளது.
அதன்படி,
ரூ.98 திட்டம் ரூ.129 ஆகவும்
ரூ.153 திட்டம் ரூ.199 ஆகவும்
ரூ.198 திட்டம் ரூ.249 ஆகவும்
ரூ.299 திட்டம் ரூ.349 ஆகவும்
ரூ.349 திட்டம் ரூ.399 ஆகவும்
ரூ.399 திட்டம் ரூ.555 ஆகவும்
ரூ.448 திட்டம் ரூ.599 ஆகவும்
ரூ.1,699 திட்டம் ரூ.2,199 ஆகவும்
அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோவின் புதிய ப்ளான் விவரம் :
ரூ.129 :
ரூ.129 சலுகையில் 2 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.199 :
ரூ.199 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.249 :
ரூ.249 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.329 :
ரூ.329 சலுகையில் 6 ஜி.பி. டேட்டா, 3000 ஆஃப்-நெட் நிமிடங்கள், 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.349 :
ரூ.349 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப்-நெட் நிமிடங்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.399 :
ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 2000 ஆஃப்-நெட் நிமிடங்கள் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.444 :
ரூ.444 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 2000 ஆஃப்-நெட் நிமிடங்கள் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.555 :
ரூ.555 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 3000 ஆஃப்-நெட் நிமிடங்கள் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.599 :
ரூ.599 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 3000 ஆஃப்-நெட் நிமிடங்கள் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.1,299 :
ரூ.1,299 சலுகையில் 24 ஜி.பி. டேட்டா, 12,000 ஆஃப்-நெட் நிமிடங்கள் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.2,199 :
ரூ.2199 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 12,000 ஆஃப்-நெட் நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
இந்த கட்டண உயர்வு நாளை முதல் (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வருகிறது.