புதுச்சேரி அரியாங்குப்பத்தில் 31 வயதான இளம்பெண் 3 வருடங்களாக போட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்து இந்த ஸ்டுடியோ ஓனரான மதுர அடிக்கடி அவருக்கு பிரியாணி, தேநீர் ஆகியவற்றில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் தனது தந்தையிடம் கூறி அழுதிருக்கிறார்.
பெண்ணின் தந்தை மதுரயிடம் நியாயம் கேட்டு வற்புறுத்த திருமணம் செய்து கொள்ள சம்மதித்து இருக்கின்றார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன அந்தப் பெண், கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
வீட்டில் யாருடனும் சரியாகப் பேசாமல் இருக்கவே, உறவினர்களின் சமாதானத்தையும் ஏற்காமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பின்னர் அவராய் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அப்போது, ஏற்கனவே திருமணமான அவரை திருமணம் செய்து கொண்டு மற்றொரு பெண்ணின் வாழ்க்கையை நான் கெடுக்க நினைக்கவில்லை. இன்னொருவரின் கணவரைத் திருமணம் செய்து அந்தப் பெண்ணுக்குத் துரோகம் செய்ய விரும்பவில்லை. என்று கூறியுள்ளார். சிகிச்சை பெற்றுவந்த அந்தப் பெண் உயிரிழந்திருப்பது அவரது உறவினர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமைப் பிரிவின்கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ஸ்டூடியோ உரிமையாளர் மதுரயைக் கைது செய்தனர்.