629 இளம்பெண்களை கடத்தி சீனாவுக்கு விற்பனை..!

சீன நாட்டை சேர்ந்த ஆடவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பாகிஸ்தான் நாட்டிலிருந்து கிட்டத்தட்ட 629 இளம்பெண்கள் விற்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

முன்னதாக, சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, பெண் சிசு களைப்பு, போன்றவை தொடர்ந்து நடைபெற்றது. இதன் காரணமாக அந்த நாட்டில் ஆண்களை காட்டிலும், பெண்களில் எண்ணிக்கையானது மிகவும் குறைவாக இருந்துள்ளது.

இதன் காரணமாக, ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்கையில், பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே பாகிஸ்தானில் இளம்பெண்களை விலைக்கு வாங்கி சீனர்கள் திருமணம் செய்து வருவதாக தகவல் வந்துள்ளது.

மேலும், ஏழை குடும்பத்தை சேர்ந்த பாகிஸ்தான் இளம்பெண்களை விலைக்கு வாங்கி, கடத்தி வந்து சீனர்களிடம் ஒரு கும்பல் விற்று வருகிறது. இருநாடுகளின் அமைப்புகள் நடத்திய விசாரணையில் இந்த தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இரு நாட்டின் தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.