படப்பிடிப்பில் நடிகைக்கு ஏற்பட்ட விபத்து..!!

பா.ரஞ்சித் இயக்கத்தில், தினேஷ் நடிப்பில் வெளியான படம் அட்டகத்தி. இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இவர் இப்படத்தைத் தொடர்ந்து எதிர்நீச்சல், புலி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் முதலில் இவருக்கு எதிர்நீச்சல், அட்டகத்தி ஆகிய படங்களைத் தவிர எந்த படமும் சிறந்த படமாக அமையவில்லை. பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து இவர் நடித்த “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படம் சிறந்த படமாக அமைந்தது. அதுவும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்ற  விஜய் சேதுபதியின் வசனம் ரசிகர்கள் மத்தில் பெரும் பேசப்பட்டது.

இதை தொடர்ந்து, நந்திதா ஐபிசி 376 என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். அதில் அவருக்கு இரண்டு வேடம், ஒன்று போலீஸ், இன்னொன்று ஆக்ரோஷமான ஒரு வேடம்.

இந்த படத்தில் ஃபஸ்ட் லுக் முன்னரே வெளியாகியது. கடந்த சனிக்கிழமை இந்த படத்தில் நந்திதா ஆக்ரோஷமாக நடனம் ஆடும் காட்சியை படமாக்கியுள்ளனர்.

அப்போது கீழே இருந்து கண்ணாடி துண்டுகள் அவரது காலை கிழித்து ரத்தம் அதிகமாக கொட்டியது. இதை தொடர்ந்து உடனே அவரை மருத்துவமனை அழைத்து சென்று முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார்.