தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து ஒரு படத்திலேயே முன்னணி நடிகைகளுக்கு இணையாக வளர்ந்து வந்தவர் நடிகை ஷாலினி பாண்டே.
இதனைத்தொடர்ந்து கொரில்லா படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தார். அதன் பிறகு ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்த 100 சதவீதம் காதல் படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் தயாராகும் நிசப்தம் படத்தில் மாதவன், அனுஷ்காவுடன் நடித்து வருகிறார்.
மேலும் சில படங்களில் நடிக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தற்போது அதிக பட வாய்ப்பு வருவதால், வாய்ப்பை விட மனமில்லாமல் தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒதுக்கிய தேதிகளை இந்தி படத்துக்கு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஷாலினி பாண்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை உடையில் குளியல் தொட்டியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.