தமிழகத்தில் கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மட்டும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலானது முறையான நடைமுறைகளை பின்பற்றி நடைபெறவில்லை என குற்றம்சாட்டி, திமுக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்ய வில்லை என கூறி திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. அதைப்போல புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு வாக்காளர்கள் தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்கள்.
இந்த வழக்கு விசாரணையானது நேற்று அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த வழக்கு விசாரணையானது தீர்ப்பு அளிக்காமல் ஒத்திவைக்கப் படட்டு இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என அறிவிக்கபட்டுள்ளது.
இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்வது தொடங்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா நடைபெறாதா என்பது இன்று காலை பத்தரை மணிக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், மறு உத்தரவு வரும்வரை ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையமே வேட்பு மனுக்களை பெற வேண்டும் என கூறியுள்ளதால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? நடைபெறாதா? மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.