மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 3213 குடும்பங்களைச் சேர்ந்த 32,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள சேம நல முகாம்களில் 654 குடும்பங்களைச் சேர்ந்த 2,102 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக அலுவலக ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார். காத்தான்குடி மற்றும் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஆகியன நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.