பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கியவர் தான் மணிமேகலை. இவருக்கென்ற தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
கடந்த வருடம் ஹீசைன் என்பவரை காதலித்து பெற்றோரிகளின் எதிர்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இவரின் காதலுக்கு பெற்றோர்களும், சகோதரர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
திருமணத்திற்கு, பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வரும் இவர், தற்போது Mr &Mrs சின்னத்திரை என்கிற நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர், தற்போது அவர்களின் திருமண நாளான இன்று, திருமணம் செய்துகொண்ட வீடியோவை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட இணையவாசிகள் அனைவரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.