நாட்டுக்கு சரியான தலைமைத்துவம் கிடைக்கும் போது நாட்டு மக்களும் வினைதிறனாக செயற்படுவார்கள் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மிளகு போன்றவற்றை இலங்கை இறக்குமதி செய்து, மீள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், தேசிய மிளகு விவசாயிகளின் விலைகள் குறைந்தது.
இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து மிளகு இறக்குமதி செய்ய நேற்று தடைவிதிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை அடுத்து 40 ரூபாயாக இருந்த மிளகின் விலை தற்போது 800 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சரியான தலைமைத்துவம் கிடைத்தால் இலங்கை முன்னேற தயாராக இருக்கும் நாடு என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.