எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும், தன்னுடைய நடிப்புத் திறமையால் அந்த கதாபாத்திரத்தை அலங்கரிக்க கூடியவர்தான் நடிகை வடிவுக்கரசி. 350 திரைப்படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்து புகழ் பெற்று வருபவர் தான் இவர்.
இந்த நிலையில் தற்போதைய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தான் நடித்த போது சந்தித்த சவால்கள் மற்றும் குடும்ப நிலை குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் குடும்ப சூழ்நிலை காரணமாக தூர்தர்ஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், துணிக்கடையில் வேலை பார்த்தும், பள்ளி ஆசிரியராகவும் ஒரே நேரத்தில் மூன்று பணிகளை மேற்கொண்டது குறித்து அவர் உருக்கமாக தெரிவித்தார்.
மேலும், அந்த சமயத்தில் தான் இயக்குனர் பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரு காட்சிகளை நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும், ஆரம்பத்தில் தயங்கி அதன் பின்னர் வீட்டிற்கு தெரியாமல் நடிக்கலாம் என்று எண்ணி ஒரு காட்சியில் மட்டும் நடித்தேன் என்று தெரிவித்தார்.
அப்பொழுது இரண்டாவது காட்சியில் நடிப்பதற்காக படக்குழுவினர் என்னுடைய வீட்டிற்கு வந்தவுடன் நான் நடித்த படங்களை காட்டினர். இதைப்பார்த்த என்னுடைய தந்தை கோபப்பட்டு அடி வெளுத்து வாங்கிவிட்டார். இருப்பினும் நடிப்பிற்காக எனக்கு கிடைத்த பாராட்டுகள் மற்றும் வரவேற்பை கண்டு தொடர்ந்து நடிக்க எனக்கு அனுமதி கொடுத்தார்.” என்று சுவாரஸ்யமாக தெரிவித்திருக்கின்றார்.