சினிமாவில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் திருமணம் செய்த பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று வாழ்வது சகஜம். அதுவும் நடிகர்களுக்குள்ளே இருக்கும் பிரச்சனையை வெளிச்சத்திற்கு கொண்டுவரவும் என்னுவார்கள்.
சமீபத்தில் அதுபோல நடந்துகொண்டிருப்பதுதான் சீரியல் நடிகை மகாலட்சுமி. தன்னுடன் சில சீரியல்களில் நடித்து வந்த நடிகர் ஈஸ்வரை காதலிப்பதாகவும், அவரின் மனைவிக்கு இருவரும் துரோகம் செய்வதாகவும் செய்தி வெளியானது.
இதுபற்றி முதன் முதலில் பேசிய மகாலட்சுமி, ‘என் கணவருடன் பலநாள் தோழியாக இருப்பது தான் ஜெயஸ்ரீ. என் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். இப்படி எனக்கு ஈஸ்வருக்கும் இடையே தவறான உறவு உள்ளது என தேவையில்லாமல் பேசிக்கொண்டிருப்பது நல்லது இல்லை.
அதுபோன்ற உறவு எங்களுக்கு இல்லை என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் ஜெயஸ்ரீ நடிகர் ஈஸ்வருக்கு 70 லட்சம் கொடுத்தால் தான் விவாகரத்து தருவேன் என்றும் மிரட்டி வருவதாக ஈஸ்வர் கூறி வருகிறார்.