இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் காஞ்சிரப்பள்ளி பகுதியில் இருக்கும் பள்ளியில் 13 வயதுடைய மாணவி 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த மாணவி நேற்று வழக்கம்போல காலையில் பள்ளிக்கு வந்து., பின்னர் பள்ளி முடிவடைந்ததும் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த சமயத்தில்., வீட்டில் பெற்றோர்கள் யாரும் இல்லாத நிலையில்., மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இந்நேரத்தில் வீட்டிற்கு வந்த நபரொருவர் மாணவியின் சகோதரரின் நண்பர் என்று கூறி., சிறுமியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
சகோதரரனின் நண்பர் என்று கூறியதால் வீட்டின் சமயலறைக்குள் சென்று தண்ணீர் எடுக்க சென்ற நிலையில்., வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காம கொடூரன்., சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் சிறுமி அலறித்துடித்த நிலையில்., இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் வீட்டிற்குள் அக்கம் பக்கத்தினர் விரைந்ததை கண்டு வாலிபன் தப்பியோடவே., பாதிக்கப்பட்ட மாணவியை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும்., இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வாலிபரை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை தேடி வந்தனர். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வையை ஏற்படுத்தியுள்ளது.