மருத்துவம் பார்க்க வசதியில்லை..! மனைவியை உயிருடன் புதைத்து கொலை செய்த கணவன்…

இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள வடக்கு கோவா பகுதியை சார்ந்தவர் துக்காராம் (வயது 46). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவரது மனைவியின் பெயர் தான்வி (வயது 44).

தான்விக்கு கடந்த சில மாதங்களாகவே கடுமையான நோயால் அவதியுற்று வந்துள்ளார். இதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலைமை இருந்துள்ளது. மேலும்., துக்காராமின் வருமானத்தில் குடும்பம் இயங்கி வந்த நிலையில்., மருத்துவமனை செலவு மற்றும் குடும்ப செலவுகளை கவனிக்க இயலவில்லை.

இதனால் மனதை கல்லாக்கிக்கொண்டு மனைவியை கொலை செய்ய முடிவு செய்து., அங்குள்ள நர்விம் என்ற கிராமத்திற்கு மனைவியை அழைத்து சென்று கால்வாயில் உயிருடன் புதைத்துள்ளார். பெண்ணை காணவில்லை என்பதால் அவரின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துர்க்காராமை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., நீர்ப்பாசன கால்வாய் அருகே நடைபெறும் கட்டுமான தளத்தில் தான்வியை உயிருடன் பிதைத்தாக தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தான்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.