“சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை அமலா பால் அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.
அவர் மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற பின்னர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். மேலும், தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக தற்போது நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் நடித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக அவர் பார்த்து வருகின்றார்.
இந்நிலையில் அமலா பால் தற்போது தென்னை மர கள்ளை கூஜாவில் ஒரே கல்பாக குடிக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கின்றார். இந்த கண்ட நெட்டிசன்கள் பலரும், மொடா குடி போல என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
அமலா பால் இப்படி தொடர்ந்து பல வித புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். பலரும், இதுபோன்ற புகைப்படம் வெளியிட வேண்டாம் என்று வற்புறுத்தி வரும் நிலையில், ஏற்கனவே அமலாபால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று வதந்திகள் கிளம்பி வரும் நிலையில், இப்படி ஓபனாக கள்ளு குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால் ரசிகர்கள் அதிற்சியில் இருக்கின்றனர்.