உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிராய்லர் கோழி குறித்த சோதனை நடத்தியதில், சுமார் 2 லட்சம் கோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருகிண்ரது.
ஊசி மட்டுமே போட்டு 45 நாட்களில் வளர்ந்து விடும் பிராய்லர் கோழிகள் 20 நாட்களில் வளர வேண்டும் என்பதற்காக கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனங்களில் மருந்து கலப்பதாக கூறப்பட்டது.
மேலும், அந்த மருந்துகளால் கோழிகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் அதிமுக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “பிராய்லர் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இருப்பதாக செய்திகள் வெளிவருவது வெறும் வதந்தி தான்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஈரோட்டில் விற்கப்படும் கோழிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. சுமார் 2 லட்சம் கோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டது.