நேற்று காலை சென்னை குரோம்பேட்டையில் இருக்கும், தனியார் கம்யூட்டர் சென்டர் ஒன்றில் படித்து வரும் பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், கல்லூரி செல்லும் பொழுது பின் தொடர்ந்து வந்து இருக்கின்றார். அப்போது திடீரென தன் கையில் மறைத்து வைத்திருக்கும், கத்தியை எடுத்து அந்த பெண்ணின் இரு கைகளையும் நடுரோட்டில் சரமாரியாக வெட்டி இருக்கின்றார்.
அதன் பின்னர் அந்த இளைஞன் அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றார். அந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கின்றார். அதன் பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டு இருக்கின்றது.
இதனை தொடர்ந்து, காவல்துறை விசாரனையில் குற்றவாளியை கைது செய்து இருக்கின்றனர். அவர் குரோம்பேட்டை நெமிலிச்சேரியை சேர்ந்த பொன் பாக்கியராஜ் ஆவர். அவர் கடந்த 4 வருடங்களாக அந்த பெண்ணை காதலித்து வந்து இருக்கின்றார்.
ஆனால், சமீப காலமாக அந்த பெண் தன்னிடம் பேசாத காரணத்தால், அவ்வாறு செய்ததாக கூறி இருக்கின்றார். ஆனால், அந்த பெண் நான் அந்த பையனை காதலிக்கவில்லை என்றும், அவர் தன்னை ஒரு தலை பட்சமாக தான் காதலித்ததாகவும் தெரிவித்து இருக்கின்றார்.தற்போது அந்த பெண் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது.