கனடா குடியுரிமை வாங்கியது ஏன்.. 2.0 வில்லன் அக்ஷய் குமார் உருக்கமான காரணம்

நடிகர் அக்ஷய் குமார் 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். தற்போது இந்திய சினிமாவில் மிக அதிகம் சம்பாதிக்கும் நடிகர் அவர் தான். அவரது நடிப்பில் இந்த வருடம் வந்த மிஷன் மங்கள், ஹவுஸ்புல் உள்ளிட்ட படங்கள் மிக பிரம்மாண்ட வசூல் ஈட்டின.

அக்ஷய் குமார் வழக்கமாக தேசிய உணர்ச்சி பொங்கும் படங்களில் அதிகமாக நடிப்பவர். ஆனால் அவர் இந்திய குடியுரிமையை துறந்துவிட்டு கனடா நாட்டின் குடியுரிமை பெற்று அந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்துள்ளார். இது பற்றி குறிப்பிட்டு பலர் அவரை தொடர்ந்து தாக்கி பேசி வருகின்றனர்.

இதற்கு அக்ஷய் குமார் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பதில் கொடுத்துள்ளார். “எனக்கு தொடர்ந்து 14 படங்கள் பிளாப் ஆனது. என் கேரியர் முடிந்துவிட்டது என எண்ணினேன், அப்போது என் நண்பர் கனடா வரும்படி கேட்டார். அதனால் தான் விண்ணப்பித்தேன். ஆனால் என் 15வது படம் ஹிட் ஆனது. அதன்பிறகு நான் அந்த பாஸ்போர்டைமாற்றாமல் வைத்திருக்கிறேன். தற்போது இந்திய பாஸ்போர்டுக்காக விண்ணப்பித்துள்ளேன்” என கூறியுள்ளார்.