ரஜினியின் பிறந்தநாள் வரும் 12ம் தேதி கொண்டாட ரசிகர்கள் அனைவரும் மிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று நடந்த தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தன் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
“எனக்கு முக்கியமான பிறந்தநாள். 69 வயது முடிந்து 70வது வருடத்தில் கால் எடுத்து வைக்கிறேன். உங்களுக்கு தெரியும் நான் 12 ம் தேதி ஊரில் இருக்க மாட்டேன். யாரும் தப்பா நெனச்சிக்க கூடாது. Fans தயவுசெஞ்சி ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். ஏழைகளுக்கு உதவி செய்ங்க..” என கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.
அதன்பிறகு ரஜினி பேசிமுடித்தபிறகு அவரது ரசிகர்கள் அனைவரும் அரங்கம் முழுவதும் ஒன்றாக சேர்ந்து happy birthday பாடல் பாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.