தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலரும் மேடையில் ரஜினி பற்றி பேசி வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது தான் ஒரு ரஜினி வெறியன் என கூறியுள்ளார்.
“நெறைய பேர் சொல்றாங்க தலைவருக்கு நல்ல ஆல்பம் கொடுக்குறீங்கனு… தலைவர்காக உயிரையே கொடுப்பேன், ஆல்பம் கொடுக்க மாட்டேனா.. நான் ஒரு தலைவர் வெறியன்”
“8 வருஷம் ஆச்சு… Thanks to தனுஷ் சார். என்ன கண்டுபுடிச்சி.. நல்லா மியூசிக் பண்ணுவன்னு., என்னை அறிமுகம் செஞ்சதுக்கு”
“நான் எப்பவுமே அழ மாட்டேன்.. ஆனா நேத்து ஸ்டுடியோல அழுதுட்டேன். உலகத்துக்கே பிடிச்ச ஒருத்தருக்கு நான் மியூசிக் போட்டு இருக்கேன்னு நினைச்சி அழுகை வந்தது. தலைவர் ரசிகரா இருக்க பெருமைப்படுறேன். அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்” என கூறியுள்ளார் அனிருத்.